News
பொண்ணுங்க என்ன வீட்டு வேலை செய்யவே பிறந்திருக்கோமா? – ட்ரெண்டாகி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்
பெண்கள் உரிமைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பேசப்பட்ட மிக முக்கியமான திரைப்படம்தான் மலையாளத்தில் வந்த த க்ரேட் இந்தியன் கிச்சன் என்கிற திரைப்படம்.

பல்வேறு கனவுகளை கொண்ட கதாநாயகி ஒருவரை திருமணம் செய்து பிறகு அதனால் காலத்திற்கு சமையல் கட்டில் முடங்கி கிடக்கிறார்.
தினசரி பெண்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்தது. பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்சமயம் இந்த படத்தை தமிழில் எடுத்துள்ளனர். கதாநாயகி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தமிழில் ரீமேக் படங்களை அதிகமாக இயக்கி வரும் இயக்குனரான ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கும் நிலையில் பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது.
ட்ரைலரை காண க்ளிக் செய்யவும்
