News
அந்த வார்த்தை கேட்டதும் உடம்பெல்லா நடுங்கிடுச்சு.. கெட்ட வார்த்தையில் திட்டினேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக அவர்கள் பல முயற்சிகளை செய்ய வேண்டும்.
அந்த வகையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென இரு இடத்தை பிடித்தவர். தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து ஒரு பெண் சினிமாவில் சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்தார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு அட்டகத்தி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அந்த படத்தில் அமுதா என்ற கேரக்டரில் அவர் நடித்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.

அட்டகத்தி படத்திற்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்தார். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பட வாய்ப்புகள் கூறிய தொடங்கினர்.
இந்நிலையில் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ;க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.
கெட்ட வார்த்தையில் திட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை படத்தில் தனுசுடன் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் நடிகர் தனுஷை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்ற காட்சி வரும். இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறும் பொழுது அதனைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், உடம்பெல்லாம் நடுக்கத் தொடங்கி விட்டது எனக் கூறினார்.
மேலும் இவ்வளவு பேருக்கு நடுவில் எப்படி கெட்ட வார்த்தைகளை பேசுவது என யோசித்தேன். ஆனால் அந்த படத்தை விடக்கூடாது என்று நினைத்தேன். அதனால் தொடர்ந்து சில நிமிடம் கெட்ட வார்த்தையாலேயே பேசினேன்.
அதை படம் பிடித்த கேமரா மேன் நான் பேசியதற்காக கை தட்டினார். முதன்முதலாக கெட்ட வார்த்தை பேசியதற்காக கைதட்டு மற்றும் பாராட்டு வாங்கியது அது தான் முதல் தடவை என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
