News
திருமணமான நடிகருடன் இரவு அந்த இடத்திற்கு செல்ல ஆசை!.. ஓப்பன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh: சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பெரிதாக அறியப்படாத நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் நடிக்கும் படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது தான்.
அந்த வகையில் சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வர வேண்டும் என்ற கனவுடன் சினிமா பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவர் சினிமாவில் பல கஷ்டமான பாதைகளைக் கடந்து தான் இந்த இடத்தில் வந்து நிற்பதாக பலமுறை சேனல்களில் கொடுக்கும் பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
அதுபோல அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகருடன் ஒரு இடத்திற்கு செல்ல ஆசைப்படுவதாக பகிர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யார் அந்த நடிகர்? ஏன் அவ்வாறு கூறினார் என்பதை நாம் பார்க்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தனது வாழ்க்கையை அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது. அவர் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் “அட்டகத்தி”. அதன் பிறகு “காக்கா முட்டை” என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இவர் பெற்றார்.

இதுபோன்று எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை தத்ரூபமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ். தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் 4 சைமா விருதுகள் உட்பட, 2 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளை வாங்கி இருக்கிறார்.
சமீபகாலங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவர் தற்பொழுது பல சேனல் பேட்டிகளில் பங்கேற்று பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
பிரபல நடிகருடன் வெளியில் செல்ல ஆசை
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது பல சேனல்களுக்கு கொடுத்து வரும் பேட்டியில், அவர் கடந்து வந்த பாதை மற்றும் அவரின் திருமணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷிடம் நீங்கள் எந்த நடிகருடன் டின்னர் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு விஜய்யுடன் டின்னர் செல்ல ஆசை என பதில் அளித்திருக்கிறார்.

இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயுடன் பல நடிகைகளும் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
