Connect with us

மறுபடியும் அஜித் அர்ஜுன் கூட்டணி! – மங்காத்தா 2 வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

News

மறுபடியும் அஜித் அர்ஜுன் கூட்டணி! – மங்காத்தா 2 வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

Social Media Bar

நடிகர் அஜித்தும் அர்ஜுனும் ஒன்றாக நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படம் அப்போது பயங்கரமான ஹிட் கொடுத்தது.

கதாநாயகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தும் கூட ஹிட் அடிக்க முடியும் என்பதற்கு சாட்சியாக இருந்தது மங்காத்தா. படத்தின் இறுதியில் அஜித் இறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் படம் முடியும்போது அவர் உயிருடன் இருப்பதாக காட்சிகள் வரும்.

எனவே மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்களுக்கு ஆவல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அஜித் மற்றும் அர்ஜூன் இருவரும் சந்தித்து கொண்டனர்.

சந்தித்து கொண்டதோடு அல்லாமல் அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் கூட ஷேர் செய்துள்ளனர். இதனால் அவரக்ள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அது மங்காத்தா 2 படத்திற்கான வேலையாக இருக்குமோ என்கிற கேள்வி தற்சமயம் எழுந்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top