விஜய் வீடியோ ட்ரெண்டாகுதுன்னு அஜித் செய்த வேலை!.. இவங்க இன்னும் திருந்தல போலயே!..

Vijay Ajith : விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவர் தொடர்பான பல விஷயங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. சொல்லப்போனால் தினசரி இணையத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு நபராக நடிகர் விஜய் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றிருந்தார் விஜய். அங்கு அவருக்கு அற்புதமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு.

எனவே அவர்கள் நடிகர் விஜய்யை பார்த்ததும் ஆரவாரம் செய்து கத்த துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு நன்றி கூறிய விஜய் ஒரு பேருந்தின் மீது ஏறி நின்று நேற்று மலையாளத்தில் அவர்களிடம் பேசி அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

Thalapathy-vijay
Thalapathy-vijay
Social Media Bar

தமிழ்நாட்டிற்கு இணையான ஒரு கூட்டத்தை கேரளாவில் பார்க்க முடிகிறது உங்கள் அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. ஓனம் பண்டிகையின் பொழுது நீங்கள் எப்படி ஒரு சந்தோஷத்தில் இருப்பீர்களோ அதே மாதிரியான மகிழ்ச்சி இப்பொழுது எனக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார் விஜய்.

இந்த நிலையில் அந்த வீடியோ ஓட்டு மொத்த சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி இருந்தது இதே நிலையில் தற்சமயம் இதனை தொடர்ந்து அடுத்து அஜித் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர் வெளிநாட்டில் எங்கோ ஒரு இடத்தில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அந்த புகைப்படமும் பிரபலமாகி வந்தது விஜய்யின் செய்தி இணையத்தில் பிரபலம் ஆகிறது என்பதால்தான் அஜித்தும் உடனே ஒரு செய்தியை பரப்புகிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே விஜய்க்கு அஜித்துக்குமான போட்டி அவர்கள் சினிமாவில் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் போல என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.