Tamil Cinema News
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்.. தொடர்ந்து நீங்கா மர்மம்.!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை செய்யும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். தமிழில் இவருக்கு பெரிய மார்க்கெட் இருந்தாலும் கூட தொடர்ந்து அஜித்திற்கு வாகன ரேஸ்கள் மீதுதான் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் மிகவும் ஊக்கமாக அஜித் இந்த மாதிரியான ரேஸ்களில் கலந்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் 2000களின் துவக்கத்தில் அவருக்கு இந்த மாதிரி ரேஸ்களில் கலந்துக்கொண்ட போது அவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதனால் பல மாதங்கள் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார் அஜித். அதற்கு பிறகு முழுமையாக கார் ரேஸ் போன்ற விஷயங்களில் இருந்து விலகியிருந்தார் அஜித். இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சமயத்தில் இவர் உலக சுற்றுலா ஒன்று சென்று வந்தார்.
அதற்கு பிறகு அவருக்கு மறுபடியும் கார் ரேஸ் செல்வது மீது ஆசை வந்தது. இந்த நிலையில் ஒரு அணியை திரட்டி மீண்டும் கார் ரேஸில் இறங்கினார் அஜித். அஜித் ஒவ்வொரு முறை கார் ரேஸில் கலந்துக்கொள்ளும்போதும் அவருக்கு விபத்து என்பது நடந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துக்கொண்டப்போது அஜித் மீண்டும் விபத்துக்குள்ளாகி இருக்கிறார். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனாலும் ஏன் தொடர்ந்து அஜித் கார் மட்டும் விபத்துக்கு உள்ளாகி கொண்டே இருக்கிறது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என பேச்சுக்கள் இருக்கின்றன.
