பொது இடத்தில் சினேகா அக்காவோடு அஜித் செய்த காரியம்.. வெளிவந்த உண்மைகள்..!
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் பெரிதாக பெண்கள் விஷயத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இல்லாத ஒரு நடிகராக அஜித் இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இருந்து அஜித்தோடு தொடர்ந்து நடிக்கும் நடிகைகள் எல்லோருமே அஜித்தை குறித்து புகழ்ந்து பேசி தான் அனைவரும் பார்த்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் குறித்து நடிகை சினேகாவின் அக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு முன்பிருந்தே அஜித்தை பிடிக்கும்.
அஜித் செய்த காரியம்:
அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே மாதிரி ஜனா திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை நான் நேரில் சந்தித்தேன்.

அவர் என்னிடம் மிகவும் நன்றாக பேசினார் அதற்கு பிறகு 10 வருடம் கழித்து அவரை ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன். ஆனால் பெரிய நடிகர் அவரை எதற்கு நாம் தொந்தரவு செய்ய வேண்டும் என்று பேசாமல் கடந்து சென்றேன்.
ஆனால் அவர் என்னை பார்த்த உடனே அடையாளம் கண்டு கொண்டார் உடனே என்னிடம் வந்து எனது குடும்பத்தை குறித்து விசாரித்தார். அவரை நாம் பார்க்காமல் சென்று விட்டோமே என்று எனக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது. அஜித் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன் என்று அவர் கூறியிருக்கிறார்.