Tamil Cinema News
15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கனவை நோக்கி சென்ற அஜித்.. ரேஸ் உடையில் வைரலாகும் வீடியோ..!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இளமை காலங்களில் துவங்கி இப்பொழுது அஜித் அடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை.
சொல்லப்போனால் அது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது இப்பொழுதும் அஜித் ஒரு திரைப்படம் நடித்தால் அது கோடிகளில் வசூல் சாதனை படைக்கும் படமாகதான் இருந்து வருகிறது. விஜய் அளவுக்கு அஜித் தொடர்ந்து படம் நடிப்பது கிடையாது.
சில நேரங்களில் ஒரு வருடம் முழுக்க அவரது நடிப்பில் படங்களே வராமல் இருப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது.
நடிகர் அஜித்:
அதற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இப்பொழுது வரை வெளியாகவே இல்லை. இந்த நிலையில் அஜித் அடுத்து தொடர்ந்து தன்னுடைய கனவான கார் ரேஸ் மீது கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.
அதனால்தான் இப்பொழுது அதிகமாக இதில் ஒரு படங்களில் நடிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிறிது நாட்களில் அஜித் சினிமாவை விட்டு போய்விடுவார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் கார் ரேஸ்க்கு உள்ள உடையை அணிந்து ஒரு ரேஸ் காருடன் சேர்ந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அது அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.