ரியல் வின்னர்! பொங்கல் வின்னர்! – போஸ்டரிலும் போட்டியா?

கடும் போட்டிகளுக்கு நடுவே கடந்த 11 ஆம் தேதி திரையில் வெளியான திரைப்படம் வாரிசு மற்றும் துணிவு. இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதுதான் போட்டியே.

வெளியான நாள் முதல் இரண்டு திரைப்படங்களுமே சரி சமமான அளவில் வசூலை பெற்று வருகின்றன. ஏனெனில் விஜய் அஜித் இருவருக்குமே சமமான அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஒருவேளை வாரிசு துணிவு இரண்டுமே சமமான அளவில் வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில் இதனால் நடிகர் அஜித்துக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் துணிவு வாரிசின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இன்று வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் வெளியானது. இந்நிலையில் துணிவு படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் த ரியல் வின்னர் என எழுதப்பட்டுள்ளது.

அதாவது உண்மையான வெற்றியாளர் துணிவுதான் என்பது போல இந்த போஸ்டர் அமைந்துள்ளது. வாரிசு படம் உண்மையான வெற்றியை அடையவில்லை. துணிவுதான் ரியல் வின்னர் என்பதாக இந்த போஸ்டர் உள்ளது என விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர்.

ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொங்கல் வின்னர் என்ற போஸ்டரை வாரிசு படக்குழுவும் வெளியிட்டுள்ளது.

ஆனால் இரண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பதால் 300 கோடி வசூலை தாண்டுவதே கடினம் என திரைத்துறையில் பேச்சு உள்ளது.

Refresh