News
ஒரு வழியா அடுத்த படத்தின் பெயரை அறிவித்த பார்த்திபன்!
தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர முயற்சித்து வரும் ஒரு சில இயக்குனர்களில் பார்த்திபனும் முக்கியமானவர். அவரது படங்களில் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்திருப்பதை பல படங்களில் பார்த்திருக்கலாம்.
ஏற்கனவே ஒரு ஒரே கதாபாத்திரத்தை வைத்து மொத்த படத்தையும் எடுக்கிறேன் என கூறி ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதன் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் இரவின் நிழல் என்கிற படத்தை எடுத்தார்.
உலகிலேயே முதன் முதலாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படம் இரவின் நிழல் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டியை அறிவித்திருந்தார் பார்த்திபன்.

அதாவது அவரது அடுத்த படத்திற்கான ஒரு குறிப்பை பதிவிட்டு அதை வைத்து அந்த படத்தின் பெயரை கண்டறியுமாறு போட்டி வைத்தார். சரியாக படத்தின் பெயரை கண்டறிபவர்களுக்கு ஒரு புடவை பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
பலரும் அந்த போட்டியில் கலந்துக்கொண்ட நிலையில் இன்று 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்பதே படத்தின் பெயர் என வெளியிட்டுள்ளார்.
