18 ஆம் தேதி வரை ஸ்பெஷல் ஷோ உண்டு !  -அறிவித்த தமிழ்நாடு அரசு!

கடந்த 11 ஆம் தேதி பெறும் போட்டியுடன் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் இந்த மாதிரி முதல் நாள் காட்சியின்போது அதை கொண்டாடுகிறேன் என்று எதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

அதே போல 11 ஆம் தேதியும் நடந்தது. திருவிழா போல கொண்டாடுகிறேன் என்று திரையரங்கு கதவை உடைத்தல், அஜித், விஜய் ஃப்ளக்ஸ்களை கிழித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு இடையே ஒரு அஜித் ரசிகர் மரணம் அடைந்த துயர சம்பவமும் நடந்தது.

இதனால் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சில நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை தடை செய்திருந்தது. பொதுவாக திரையரங்குகளில் நான்கு காட்சிகள் திரைப்படம் ஒளிப்பரப்பப்படும்.

ஆனால் இந்த மாதிரியான நாயகர்கள் படம் வரும்போது மட்டும் காலை 4 மணி மற்றும் 8 மணி காட்சிகள் கூடுதலாக ஒளிப்பரப்பப்படும்.

இந்த நிலையில் இந்த காட்சிகள் பொங்கல் சமயத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து திரையரங்க முதலாளிகள் அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வருகிற 18 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

Refresh