News
வெளிநாட்டிலும் சக்கை போடு போட்ட மங்காத்தா!.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்த கோடைக்காலத்திற்கு விடுமுறையில் இருக்கும் சிறுவர்கள் பார்ப்பதற்கு கூட திரையரங்கில் பெரிய படம் என எதுவும் தற்சமயம் வரவில்லை. எனவே பழைய திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ரி ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அடுத்து பழைய படங்களை ரி ரிலீஸ் செய்து வருகின்றனர் திரைத்துறையினர். அந்த வகையில் நேற்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சில திரைப்படங்கள் வெளியாகின.

தீனா, பில்லா ஆகிய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகின. மங்காத்தா திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் வெளியானது. வெளிநாட்டுகளிலேயே 50 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது மங்காத்தா திரைப்படம்.
வெளிநாடுகளில் ரி ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் இவ்வளவு வசூலிப்பதே அதிகம் என்பதால் இது பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
