Tamil Cinema News
அமர்களம் 2வில் எண்ட்ரி ஆகும் எஸ்.ஜே சூர்யா.. இது புது காம்போவா இருக்கே..!
சமீப காலங்களாகவே நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களில் எல்லா படமுமே வரவேற்பை பெற்று விடுவதில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அஜித்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அவர் அதிக வரவேற்பை பெற மிக உதவியாக இருந்தவர் இயக்குனர் சரண். சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்களம் ஆகிய இரு திரைப்படங்களுமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து சரணுக்கு அஜித் மீண்டும் வாய்ப்பளிக்க உள்ளார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் அமர்களம் 2 திரைப்படம் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் அமர்களம் 2 வை இயக்குனர் சரண் இயக்கவில்லையாம். மாறாக இயக்குனர் எஸ்.ஜே சூர்யாதான் இந்த படத்தை இயக்க போகிறார் என்பதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படமும் பெரிய ஹிட் படம் என்பது பலருமே அறிந்த விஷயமே.
