Tamil Cinema News
ஆப்ரஷன் முடிஞ்சு வர மாட்டேன்னு நினைச்சீங்களா.. கண்ணீர் விட்டு அழுத அஜித்.. விவரத்தை கூறிய தயாரிப்பாளர்.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவராக இருந்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அஜித் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்.
அப்படியாக முந்தைய திரைப்படங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனந்த பூங்காற்றே என்கிற திரைப்படம் அஜித்தின் வெற்றி திரைப்படங்களில் முக்கியமான படமாகும்.
அந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு அஜித் மிகுந்த கஷ்டத்தில் இருந்துள்ளார். அப்பொழுது ஆனந்த பூங்காற்றே படத்தின் தயாரிப்பாளர் காஜா மைதீன் அஜித்தை சந்தித்து அந்த படம் குறித்து பேசி இருக்கிறார்.
தயாரிப்பாளர் சொன்ன விஷயம்:
உடனே அஜித் ஆரம்பத்திலேயே 22 லட்சம் சம்பளமாக கொடுத்தால் தான் படத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் அப்பொழுது அஜித்துக்கு நிறைய கடன்கள் இருந்தது. 20 லட்சம் கடனுக்கும் பாக்கி 2 லட்சம் தனக்கும் தேவைப்படுவதால் 22 லட்சம் சம்பளம் வேண்டும் என்று அஜித் கூறியிருந்தார்.
அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்ட பிறகு படப்பிடிப்பு துவங்கியது ஆனால் படப்பிடிப்பு துவங்கி 6 மாதங்களாகியும் ஒழுங்காக அஜித் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனை அடுத்து இது குறித்து தயாரிப்பாளர் கேட்ட பொழுதுதான் அஜித் விபத்துக்கு உள்ளான விஷயம் தெரிந்திருக்கிறது.
காலில் ஏற்பட்ட பிரச்சனை:
காலில் அறுவை சிகிச்சை செய்த பிறகுதான் அஜித் நடிக்க முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. உடனே இந்த சம்பளம் மட்டுமன்றி மருத்துவ செலவுக்கு தனியாக அவருக்கு ஒரு தொகையை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர்.
மேலும் அஜித்தை வைத்து படத்தை தொடர முடியாது என்பதால் நடிகர் பிரசாந்திடம் அந்த படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் இந்த விஷயத்தை அறிந்த அஜித் தயாரிப்பாளரிடம் நான் சிகிச்சைக்கு சென்று விட்டு திரும்ப வரமாட்டேன் என்று நினைத்தீர்களா? என்று கண்ணீர் மல்க கேட்டு இருக்கிறார்.
இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர் காஜா மைதீன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பிறகு ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் அஜித் தான் கதாநாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்தது.