Connect with us

மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..

Tamil Cinema News

மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் முக்கிய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ஆனால் சமீப காலங்களாக அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியிருந்தார். இதனாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். இதனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.

அதற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் மட்டுமே அதிகம் விரும்பும் திரைப்படமாக இருந்தது. இதனை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்க விருக்கும் திரைப்படம் குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்களம் மாதிரியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

To Top