Connect with us

சட்டத்தை யாருமே மதிக்கிறது இல்ல!.. ஓட்டு போடுறதில் வரம்பு மீறிய பிரபலங்கள்!..

rajini vijay

News

சட்டத்தை யாருமே மதிக்கிறது இல்ல!.. ஓட்டு போடுறதில் வரம்பு மீறிய பிரபலங்கள்!..

Social Media Bar

நேற்று பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் சுமூகமாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்த அளவில் ஓட்டுகள் வரவில்லை என கூறப்படுகிறது. 60 விழுக்காடு ஓட்டுக்கள்தான் பதிவாகின என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க பிரபலங்கள் எல்லாம் காலையிலேயே ஓட்டு போட சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதிலும் அஜித், சிவகார்த்திகேயன் எல்லாம் காலை 7 மணிக்கே ஓட்டு போட சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் அஜித் ஓட்டு போடும்போது ஒரு முதியவரை தாண்டி சென்று ஓட்டு போட்டார். இதனால் கடுப்பான முதியவர் அங்கேயே சண்டை போட துவங்கிவிட்டார். இந்த நிலையில் பிரபலங்கள் ஓட்டு போடும்போது சில சட்ட ஒழுங்கை மீறியதை பார்க்க முடிகிறது.

அஜித், விக்ரம், ரஜினி மாதிரியான நடிகர்கள் ஓட்டு போடும் இடத்திற்கு செல்லும்போது கூடவே தங்களுடைய மேனஜரையும் கூட்டி சென்றுள்ளனர். என்னதான் பிரபலமாக இருந்தாலும் ஓட்டு போடும்போது அங்கு மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.

பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் கூட அவர்களும் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றுதான் படம் பிடிப்பார்கள். இந்த நிலையில் பிரபலங்கள் மட்டும் சட்டத்தை இப்படி மீறலாமா என்கின்றனர் நெட்டிசன்கள்.

To Top