Tamil Cinema News
இரவில் படப்பிடிப்பில் அஜித் செய்த காரியம்.. ஆடிப்போன படக்குழு..!
நடிகர் விஜயகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக மக்களால் போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தை பொருத்தவரை எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்.
அஜித்தோடு சேர்ந்து நடிக்கும் பெரும்பான்மையான நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவருடன் நடித்தது மிகவும் பிடித்திருந்தது என பேட்டியில் கூறுவதை கேட்டிருக்கலாம்.
இந்த நிலையில் அஜித்துடன் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தில் அஜித் கூறும் பொழுது விமான நிலையத்தில் நிற்பது போன்ற காட்சி எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலும் அஜித் நடிக்கும் போது நாங்கள் எல்லாம் மிகவும் அமைதியாக இருப்போம். அவருடன் பேசக்கூட மாட்டோம் ஏனெனில் பெரிய நடிகர்களுடன் இயல்பாக பேசக்கூடாது என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறை.
அப்படி இருக்கும் பொழுது அஜித் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டு நான் நின்றேன் அப்பொழுது திடீரென்று எனக்கு பின்னால் இருந்து சாப்பிட்டாச்சா என்று குரல் கேட்டது. யார் இப்படி கேட்கிறார்கள் என திரும்பி பார்த்தபோது அஜித் என் பின்னால் நின்றார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.
என்னதான் எங்களிடம் அவரிடம் பேசக்கூடாது என்று கூறினாலும் கூட அவரே எங்களிடம் வந்து பேசிவிடுவார். அதுதான் அஜித்தின் இயல்பான குணம் என்று அவர் கூறியிருக்கிறார்.
