Tamil Cinema News
விஜய்க்கு கட்டம் கட்டும் அரசியல்… இதுதான் முதல்படி.!
ரஜினிகாந்திற்கு அடுத்து வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் தமிழில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருந்து வருகிறார்.
அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித்தின் உயரம் என்பது பலரும் கணிக்க முடியாததாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு அந்தணன் சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது விஜய்க்கு எதிராக கட்டம் கட்டி செய்யும் ஒரு விஷயமாகவே இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்கிறார். விஜய் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அஜித்துக்கு ஆதரவு கொடுத்து அவரை அரசியலுக்குள் கொண்டு வரவே இந்த மாதிரியான திட்டங்களை போடுகின்றனர் என இதுக்குறித்து கூறியுள்ளார் அந்தணன்.
