Connect with us

யார் பார்த்த வேலை இது… விக்கிப்பீடியாவில் நடிகர் அஜித்தை அவமானப்படுத்தும் வகையில் தகவல்..!

Tamil Cinema News

யார் பார்த்த வேலை இது… விக்கிப்பீடியாவில் நடிகர் அஜித்தை அவமானப்படுத்தும் வகையில் தகவல்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்றுதான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு அஜித்துக்கு ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித்தும் மிக முக்கியமானவர்.

ஆனால் அஜித் மற்றும் விஜய் இவர்களின் ரசிகர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பது எப்போதுமே இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் இருவருமே திரைப்படங்கள் நடிக்கும் போது போட்டி போட்டுக் கொண்டு ஒரே நாளில் இருவர் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் குறித்த விவரம்:

போன வருடம் கூட விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இப்படி போட்டிகள் இருந்து வருவதால் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் விஜய் குறித்து மோசமாக பேசுவதும் விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமாக பேசுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விக்கிபீடியா தளத்தில் தற்சமயம் அஜித் குறித்த தவறான தகவல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விக்கிபீடியா தளமானது பல தகவல்களை வழங்கும் ஒரு தளமாக இருக்கிறது. இதில் அஜித் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதில் ஒவ்வொரு படத்தின் பெயரும் அதில் அஜித் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் பார்க்க முடியும். இந்த நிலையில் அந்த விவரங்களில் லியோ திரைப்படத்தில் அஜித் சுப்பிரமணியம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததாக ஒரு விவரம் இடம் பெற்று இருக்கிறது. சுப்பிரமணி என்பது ஒரு விலங்கின் பெயராகும். அந்த விலங்காக அஜித் நடித்திருப்பதாக யாரோ வேண்டுமென்றே பதிவிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது

https://en.wikipedia.org/wiki/Ajith_Kumar_filmography

To Top