மொட்டை மாடியில் நின்று போட்டோ எடுத்த மர்ம நபர்கள்! – போலீஸிற்கு தகவல் அளித்த பாலிவுட் நடிகை!

 பாலிவுட்டில் உள்ள முக்கியமான நடிகைகளில் ஆலியா பட்டும் ஒருவர். சமீபத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்திரம் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படங்களாக அமைந்தன.

Social Media Bar

நடிகை ஆலியா பட் வெகு நாட்களாக பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்வீர்  கபூரை காதலித்து வந்தார்.  இந்த நிலையில் போன வருடம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது அது குறித்த தகவலை இவர்கள் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.

பிரம்மாஸ்திரம் திரைப்படத்திலும் ஆலியா பட்டிற்க்கு ஜோடியாக ரன்பீர் கபூர்தான் நடித்திருந்தார். தற்சமயம் ஆலியா பட் மும்பையில் உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த வீட்டில் இவர் இருக்கும் புகைப்படத்தை யாரோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தனர்.

இதுக்குறித்து ஆலியா பட் கூறும்போது “ எனது வீட்டில் நான் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து சில ஆண்கள் என்னை படம் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்.  இது ஒரு தனிநபர் மீதான அத்துமீறல் அல்லவா? இதை எப்படி மற்றவர்கள் அனுமதிக்கிறார்கள்“  எனக் கூறி மும்பை போலீசை டேக் செய்து பதிவு ஒன்றை ஆலியா பட் போட்டிருந்தார். 

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் ஆலியா பட்டின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.