Actress
உதட்டு முத்தம் மூலம் காதல் சொன்ன ஆல்யா பட்! – திருமண புகைப்படங்கள்!
இந்தி நடிகை ஆல்யா பட் – ரன்பீர் கபூர் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

இந்தியில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆல்யா பட். இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் மஹேஷ் பட்டின் மகள்.

தொடர்ந்து பத்ரிநாத் துல்கனியா, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான ஆல்யா தற்போது கங்குபாய் படத்திலும் நடித்திருந்தார்.

29 வயதாகும் ஆல்யா பட் அவரை விட 10 வயது அதிகமான நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமண நிகழ்வில் உதட்டோடு உதடு பதித்து தன் காதலை ஆல்யா வெளிப்படுத்திய புகைப்படங்கள் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் திருமண வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

