ஆசையா வாங்குன பைக்.. குடுத்துடுங்க ப்ளீஸ்..! – சோகத்தில் மணிமேகலை!

பிரபல டிவி ஷோ பிரபலமான மணிமேகலை ஆசையாக வாங்கிய பைக்கை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

Manimegalai

தமிழ் சின்னத்திரை உலகில் ம்யூசிக் சேனல் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் மணிமேகலை. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தற்போது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பெரும் ரசிகர்களை ஈட்டியுள்ளார்.

சமீபத்தில் தி.நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பைக்கில் சென்ற மணிமேகலை பைக்கை வெளியே நிறுத்தி வைத்துள்ளார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சோகமாக பதிவிட்டுள்ள மணிமேகலை, அது ஆசை ஆசையாக காசு சேர்த்து வாங்கிய பைக் என்றும், பைக் பற்றில் தகவல் கிடைத்தால் தெரிவிக்க கோரியும் வண்டி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

Refresh