கேஜிஎஃப்.. 3 நாள்ல இவ்ளோ வசூலா! அதிர்ச்சியில் ராஜமௌலி? – வசூல் நிலவரம்!

யஷ் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டு வரும் கேஜிஎஃப்2 வசூலில் ராஜமௌலி படத்தி முறியடிக்க உள்ளது.

KGF 2
KGF Chapter 2

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கிய படம் கேஜிஎஃப்2. இதன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் வெளியான இந்த படம் கடந்த 3 நாட்களாக ஹவுஸ்புல்லாகி உள்ளது. நாளுக்கு நாள் திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

கடந்த 14,15ம் தேதிகளில் இந்தியாவில் மட்டும் ரூ.240 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி கடந்த 3 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.540 கோடியை வசூலித்த கேஜிஎஃப் 2 ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் 1000 கோடி வசூலை முறியடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh