Tamil Cinema News
அல்லு அர்ஜுன் கைது.. புஷ்பா 2 வால் வந்த வினை..!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் ஆர்யா திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.
அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பிரபலமான அல்லு அர்ஜுன் தென்னிந்திய அளவில் நிறைய ரசிகர்களை பிடிக்க தொடங்கினார். அந்த வகையில் இந்திய அளவில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் புஷ்பா.
புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற நடிகராக மாறினார் அல்லு அர்ஜுன். அந்த திரைப்படமும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் தற்சமயம் வெளியாகி அதுவும் எக்கசக்கமான வசூலை பெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் கைது:
ஆனால் இந்த படத்தின் முதல் நாள் ஒரு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் ஒரு திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருகை தந்திருந்தார். அப்பொழுது அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டமாக சென்றதில் ஒரு பெண் அந்த கூட்டத்தில் மாட்டி இறந்து விட்டார்.
அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் தற்சமயம் அல்லு அர்ஜுனை கைது செய்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு அன்று வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவிதம் நடந்திருக்காது.
எனவே இதற்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்தும் கூட அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.