News
1.8 கோடியில் வீடு.. ஆல்யாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!.
வெள்ளித்திரையில் பல நடிகைகள் பிரபலமாக உள்ள நிலையில், சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆல்யா மானசா.
இவர் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டு, தற்போது பிரபலமான ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் தற்பொழுது 1.8 கோடிக்கு வீடு கட்டி இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது ஆல்யா மானசாவின் சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
புதிதாக வீடு கட்டி குடியேறிய ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் ஆல்யா மானசா நல்ல பிரபலம் அடைந்தார். மேலும் அந்த நாடகத்தில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ஆல்யா மானசாவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் சஞ்சீவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் நடிக்கிறார். இருவரும் சமீபத்தில் புதிய வீடு ஒன்று கட்டி குடியேறினார்கள். சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியாக அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
தற்பொழுது அவர்கள் வீடு கட்டி குடியிருக்கும் அந்த வீட்டின் மதிப்பு 1.8 கோடி என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு அவர்களின் அம்மா அப்பா பெயரை வைத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்கள்.
ஆலியா மானசாவின் ஒருநாள் சம்பளம்
ஆலியா மானசா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சம்பளத்தை பற்றி கூறியிருக்கிறார். அதில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் இனியா தொடரில் நடிக்கும் போது அவருக்கு ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20000 முதல் 25000 வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும். தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
