Connect with us

சைலண்டாக சம்பவம் செய்த லக்கி பாஸ்கர்.. அமரனை மிஞ்சிய வசூல்? இதை கவனிக்கலையே..!

amaran lucky basker

Tamil Cinema News

சைலண்டாக சம்பவம் செய்த லக்கி பாஸ்கர்.. அமரனை மிஞ்சிய வசூல்? இதை கவனிக்கலையே..!

Social Media Bar

தற்சமயம் தமிழில் தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியானது இந்த நான்கு திரைப்படங்களுக்கு இடையே எந்த திரைப்படம் அதிக வசூலை செய்ய போகிறது என்பதே இப்பொழுது பெரிய போட்டியாக இருந்து வருகிறது.

அமரன், லக்கி பாஸ்கர், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய நான்கு திரைப்படங்கள் தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கின்றன. லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.

ஏனெனில் துல்கர் சல்மான் இந்த மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். அமரன் திரைப்படத்தை பொறுத்தவரையில் இந்தியா முழுவதுமே வெளியாகி இருக்கிறது.

லக்கி பாஸ்கர் வசூல்

அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தற்சமயம் வெளியான நான்கு திரைப்படங்களில் அதிக வசூலை அமரன் திரைப்படம் தான் குவித்திருக்கிறது.

sk amaran

sk amaran

ஆனால் பட்ஜெட் ரீதியாக பார்க்கும் பொழுது அமரன் திரைப்படத்தை விட பெரும் வெற்றி படமாக லக்கி பாஸ்கர் திரைப்படம் தான் இருக்கிறது ஏனெனில் அமரன் திரைப்படம் முதல் நாளே 42 கோடி வசூல் செய்தது ஆனால் அந்த படத்தின் பட்ஜெட் 130 கோடி ரூபாய் ஆகும்.

130 கோடியில் 30 சதவீதத்தைதான் முதல் நாள் வசூலில் பெற்றிருக்கிறது அமரன் திரைப்படம். ஆனால் லக்கி பாஸ்கர் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடி ரூபாய் தான்.

அதில் 22 கோடி வசூல் செய்திருக்கிறது லக்கி பாஸ்கர் திரைப்படம் கிட்டத்தட்ட படத்தின் தயாரிப்பு செலவில் 70% தொகையை வசூல் செய்திருக்கிறது லக்கி பாஸ்கர் எனவே பட்ஜெட் ரீதியாக பார்க்கும் பொழுது அமரனை விடவும் அதிக வெற்றி பெற்ற படமாக லக்கி பாஸ்கர் படம் பார்க்கப்படுகிறது.

To Top