சார் நீங்க போங்க.. இங்க நான் பாத்துக்குறேன்..கோட் பட வசூலை முறியடித்த அமரன்… சொன்ன மாதிரியே செஞ்ச சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் ஒரு நடிகன் என்றால் அது நடிகர் விஜய் தான்.
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு செல்கிறார் என்கிற பொழுது அவருடைய இடம் என்பது தமிழ் சினிமாவில் வெற்றிடமாக மாறும். அந்த இடத்தை பிறகு யார் பிடிப்பது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் விஜய் சினிமாவிற்கு வந்த சமகாலத்தில் வந்தவர்கள் தான்.
எனவே அவர்கள் கூட இப்பொழுது அந்த இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு பிறகு அவரது இடத்தை சிவகார்த்திகேயன்தான் பிடிப்பார் என்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.

விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்
இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் அமரன் திரைப்படத்தின் வசூல் கோட் திரைப்படத்தை தாண்டி ஒரு பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. கோட் திரைப்படம் மொத்தமாக 440 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது.
ஆனால் அமரன் திரைப்படம் முதல் நாளே 42 கோடி வசூல் செய்திருக்கிறது இந்த நிலையில் கோட் திரைப்படம் மொத்தமாக ஆந்திராவில் 3.8 கோடிக்கு வசூல் செய்தது. ஆனால் அமரன் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களிலேயே அதனை மிஞ்சி தற்சமயம் வரை 4.5 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்த வசூல் நிலவரம் இன்னமுமே அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் ஆந்திராவில் விஜய்யின் கோட் திரைப்படத்தை அமரன் திரைப்படம் வசூலில் மிஞ்சி இருக்கிறது.