Connect with us

சாய்ப்பல்லவியின் மொபைலால் வந்த பிரச்சனை… தூக்கத்தை இழந்து தவிக்கும் மாணவன்.. பெரிய பிரச்சனைதான் போல..

sai pallavi

Tamil Cinema News

சாய்ப்பல்லவியின் மொபைலால் வந்த பிரச்சனை… தூக்கத்தை இழந்து தவிக்கும் மாணவன்.. பெரிய பிரச்சனைதான் போல..

Social Media Bar

Actress Saipallavi is currently back in the limelight with her role in the movie Amaran. Meanwhile, Sai Pallavi’s scene in the movie Amaran has caused a problem for a student.

திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் அமரன் திரைப்படத்தால் கல்லூரி மாணவன் கடந்த நான்கு, ஐந்து நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உண்மையாக வாழ்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜன் என்பவரது வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் அமரன்.

sivakarthikeyan
sivakarthikeyan

அமரன் திரைப்படத்தில் நிறைய சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பலவும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும் படத்தில் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்து விடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

படத்தில் இடம்பெற்ற காட்சி:

இதனால் அந்த மாணவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அது என்னவென்றால் படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் மொபைல் நம்பராக ஒரு எண் காட்டப்படும்.

அந்த எண் இந்த மாணவரின் மொபைல் எண் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அதுதான் சாய் பல்லவியின் நிஜமான மொபைல் நம்பர் என்று நினைத்த ரசிகர்கள் தொடர்ந்து அந்த எண்ணுக்கு போன் செய்து வருகின்றனர்.

இதனால்தான் நான்கு நாட்களாக தூக்கத்தை தொலைத்து இருக்கிறாராம் இந்த மாணவர். இவர் ட்விட்டர் வழியாக இதற்காக பட குழுவை தொடர்பு கொள்ள முயற்சித்தப்போதும் கூட படக்குழு எந்த ஒரு பதிலும் அவருக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியாக ஒரு காட்சியின் மூலமாக அந்த மாணவருக்கு பெரும் தொந்தரவை கொடுத்திருக்கிறது அமரன் திரைப்பட குழு.

To Top