Movie Reviews
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எப்படியிருக்கு அமரன் திரைப்படம்.. பட விமர்சனம்!..
மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது அமரன் திரைப்படம்.
முக்கால்வாசி புக்கிங் ஆகி சாதனையை படைத்தது அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன் இதனாலேயே அமரன் திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று படம் வெளியான நிலையில் அதற்கு விமர்சனங்கள் வர துவங்கியிருக்கின்றன.
படத்தின் கதை:
அமரன் திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் எதிர்பார்த்தது என்னவென்றால் இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகளும் ராணுவக் காட்சிகளும் இருக்கும் என்பதுதான். ஆனால் அதைத்தாண்டி உணர்ச்சிகரமான காட்சிகள் தான் படத்தில் அதிகமாக இருப்பதாக இருக்கின்றன.
படத்திற்கு போகும்பொழுதே கையில் கைக்குட்டையோ அல்லது டிஷ்யூ பேப்பரோ எடுத்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதில் எமோஷன் காட்சிகள் இருக்கின்றன. எந்த அளவிற்கு இராணுவம் சார்ந்த காட்சிகள் இருக்கின்றனவோ அதே அளவிற்கு காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருக்கின்றன.
ஏனெனில் சிவகார்த்திகேயனின் மனைவி கதாபாத்திரம் பார்வையில் இருந்துதான் இந்த கதை செல்கிறது எனவே ராணுவம் வீரம் என்பதை எல்லாம் தாண்டி தன்னுடன் தனது கணவருக்கு ஏற்படும் பிரிவு மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இவற்றை தான் முக்கியமாக பேசுகிறது இந்த படம் .
னால் ராணுவம் மற்றும் சொந்த வாழ்க்கை என்று ஒரு ராணுவ வீரர்களின் இரண்டு பக்கங்களையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது அமரன் திரைப்படம். மிகவும் செண்டிமெண்டலான ஒரு திரைப்படமாக அமரன் அமைந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் கண்டிப்பாக இது ஒரு மாறுபட்ட படமாக இது இருக்கும் எத்தனை வருடமானாலும் பேசப்படும் ஒரு படமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்