பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அமீர்கான் இருந்து வருகிறார். இப்பொழுது அவரது நடிப்பில் இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சித்தாரே சமீன் பர். இது 20 ஜூன் அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது.
சித்தாரே சமின்பர் படம் தாரே சமின்பர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். தாரே சமின்பர் திரைப்படத்தில் எழுதுவதற்கு கஷ்டப்படும் ஒரு சிறுவனுக்கு ஆசிரியராக வரும் அமீர்கான் அவனை எப்படி சரி செய்கிறார் என்பதாக கதை செல்லும்.
அதை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழில் பசங்க 2 என்கிற திரைப்படம் வந்தது. இந்த நிலையில் சித்தாரே சமீன் பர் முழுக்க முழுக்க அதிலிருந்து மாறுபட்ட ஒரு படமாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம்தான் குடிகாரனாகவும் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மனநல பிரச்சனை கொண்ட நபர்களை வைத்து உருவாகும் புட்பால் டீமை வழிநடத்தும் பணி அமீர் கானுக்கு வருகிறது.
அதை வைத்து அவர் என்ன செய்கிறார் என்பதாக படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜெனிலியா வெகு வருடங்களுக்கு பிறகு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.