சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனெனில் 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் கமலுக்கு எதிரி கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Bar

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் தற்சமயம் படம் பார்த்துவிட்டு வந்த அமீர் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர்கள் எப்போதுமே கமல்ஹாசன் குறித்த விஷயங்களில் அவருக்கு முதலில் ஆதரவாக நீங்கள்தான் பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர் கூறும்போது நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். விஸ்வரூபம் விஷயத்திலும் சரி, இப்போதும் சரி கமல்ஹாசன் விஷயத்தில் எந்த தவறும் இல்லை. அவர் திராவிட மொழிகள் எல்லாம் ஒன்று என்கிற ரீதியில்தான் பேசியிருந்தார்.

அதை சில சங்கி குழுக்கள் மாற்றி பேசி வருகின்றன என கூறியுள்ளார் அமீர். மேலும் அமீர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் படம் தயாராவது குறித்து கமல்ஹாசனிடம் பேசுவதாகவும் அமீர் கூறியுள்ளார்.