Tamil Cinema News
இப்படி ஒரு பாட்ட நான் கேட்டதே இல்ல.. இளையராஜாவின் அந்த பாட்டை கேட்டு ஆடிப்போன அமெரிக்கர்..!
தமிழ் மக்களால் எப்போதுமே அதிகமாக போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி ஒரு பெரிய சாதனையாளராக தான் அனைவராலும் இளையராஜா பார்க்கப்படுகிறார்.
அதற்கு முக்கிய காரணம் இளையராஜா பெரிதாக இசையை பற்றியே ஒன்றும் தெரியாமல் கிராமத்திலிருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவராவார்.
அப்படி வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறார் மேலும் உலக அளவிலேயே அவருக்கு அதிக அங்கீகாரம் இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
இளையராஜா பாடல்:
ஆனால் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இளையராஜாவை கொண்டாடும் பொழுது அது அதிக வியப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. ஏனெனில் மற்ற நாட்டவர் நமது இளையராஜாவிற்கு ஒரு மரியாதை கொடுக்கிறாரே என்பது காரணம் தான் அது.
இந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் ராஜராஜ சோழன் நான் பாடலை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அதை தனது youtube சேனலிலும் பதிவேற்றியுள்ளார். மேலும் அவர் கூறும் பொழுது ஒரு ராகத்தில் இருந்து இன்னொரு ராகத்திற்கு இளையராஜா மிக எளிதாக மாறினார் அது அதிசயமாக இருந்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
