அந்த பையனோட நெருக்கமா இருக்கும் அம்மு அபிராமி!.. குக் வித் கோமாளில வந்த பழக்கமா?

திரைத்துறையில் தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்து வருகிறார் நடிகை அம்மு அபிராமி. சின்ன திரை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அம்மு அபிராமி அதன் பிறகு தொடர்ந்து வரவேற்பை பெற துவங்கினார்.

பைரவா திரைப்படத்தில் முதன் முதலாக சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அம்மு அபிராமி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

Social Media Bar

தொடர்ந்து “என் ஆளோட செருப்ப காணோம்”, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த ராட்சசன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அம்மு அபிராமிக்கு கிடைத்த வாய்ப்பு:

ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகுதான் அம்மு அபிராமிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து சின்ன திரையில் பிரபலமாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் அம்மு அபிராமி.

அதில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் அம்மு அபிராமி. அதற்கான வாய்ப்புகளையும் தற்சமயம் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளியை நடத்தி வந்த இயக்குனர் பார்த்தீவ் மணியுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்சமயம் அவருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மு அபிராமி. அதில் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் பலரும் இருவரும் காதலித்து வருவதாக கூறுகின்றனர்.

அதற்கு தகுந்தாற் போல அம்மு அபிராமியும் அந்த புகைப்படத்திற்கு கீழ் ஹார்ட் இமோஜியை பதிவிட்டுள்ளார்.