தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். பாக்யராஜ் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்பு பெற்ற ஒரு இயக்குனராக இருந்தார்.
தினமும் அவரது அலுவலகத்தில் அவரை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே நிற்கும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கான வரவேற்பு இருந்தது. அதேபோல ஒவ்வொரு படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொழுதும் ஒவ்வொரு காட்சியும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் பாக்யராஜ்.

அப்படி பாக்கியராஜ் எடுத்து சினிமாவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்தான் ராசுகுட்டி. ராசுக்குட்டி திரைப்படத்தில் வெள்ளந்தியான ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார். பெரும்பாலும் திரைப்படங்களில் ஒரு வெள்ளந்தியான கதாபாத்திரமாகதான் பாக்கியராஜ் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து உதவி இயக்குனர் செம்புலி ஜெகன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அதில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறியிருந்தார்.
ஒரு காட்சியில் மனோரமாவும் செம்புலி ஜெகனும் சேர்ந்து ஒரு ஆளை பாலத்துக்கு கீழே தள்ளி விட வேண்டும், கீழே தண்ணீர் இருப்பதால் அவர் அதில் குதித்து போய் கரை சேர்ந்து விடுவார். ஆனால் அதில் ஒரு அசம்பாவிதம் நடந்தது கீழே சிமெண்டில் தரை போடப்பட்டிருந்தது மேலே தண்ணீர் இருந்ததால் அது தெரியவில்லை.

இந்த நிலையில் குதித்தவர் நேராக போய் அதில் அவரது தலை அடிபட்டு மிகவும் சீரியஸான ஒரு நிலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு படப்பிடிப்பு தளாமே சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி உள்ளனர்.






