Connect with us

தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை… கோலி குண்டை வைத்து பிரச்சனையை சரி செய்த இயக்குனர்!..

sridhar padmini

Cinema History

தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை… கோலி குண்டை வைத்து பிரச்சனையை சரி செய்த இயக்குனர்!..

Social Media Bar

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். காதலுக்கு மரியாதை போன்ற அவரது திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் திரைப்படமாக இருக்கின்றன.

தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் திரைத் துறையில் பிரபலமாக இருந்த பொழுது நடிகை பத்மினி இவருக்கு சிறந்த தோழியாக இருந்து வந்தார். இந்த நிலையில் பத்மினியை வைத்து நிறைய திரைப்படங்களை ஸ்ரீதர் இயக்கியிருக்கிறார்.

ஆனால் பத்மினியிடம் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் அவர் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார். பொதுவாக அப்பொழுது நடித்தவர்கள் எல்லாம் நாடக நடிகர்கள் என்பதால் படப்பிடிப்பிற்கு தாமதமாக யாருமே வர மாட்டார்கள்.

ஆனால் பத்மினி மட்டும் தாமதமாக வருவதால் படப்பிடிப்பே தாமதமானது இந்த நிலையில் மீண்ட சொர்க்கம் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது தினசரி பத்மினி தாமதமாக வருவதை பார்த்த ஸ்ரீதர், ஒரு நாள் அவர் வருவதற்கு முன்பு கோலி குண்டுகளை வாங்கி வரச் சொல்லி அதை கொண்டு படப்பிடிப்பு ஊழியர்களுடன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த பத்மினி என்ன எல்லோரும் கோலி விளையாடி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் நாங்கள் உனக்கு முன்னாடியே படப்பிடிப்பிற்கு வந்து விடுகிறோம் வந்த எங்களுக்கு பொழுது போக வேண்டாமா? அதற்காகத்தான் கோலி விளையாடுகிறோம் என்று மறைமுகமாக அவர் தாமதமாக வருவதை கூறி இருக்கிறார். அதற்கு பிறகு ஒரு நாள் கூட பத்மினி படப்பிடிப்பிற்கு தாமதமாக வரவில்லையாம்.

To Top