நடிகை கூட போட்டோ எடுக்கலாம் டைம் இல்ல!.. வேலைதான் முக்கியம்!.. டாப் நடிகையை கண்டுக்கொள்ளாமல் சென்ற ஸ்விக்கி ஊழியர்!..
பொதுவாக சினிமா நடிகைகள் யாராவது நமக்கு எதிரே வந்தால் உடனடியாக அவர்களோடு சென்று ஒரு போட்டோவாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் ஒரு ஸ்விக்கி ஊழியர் வேலைதான் முக்கியம் என கதாநாயகி நடிகையை கண்டுக்கொள்ளாமல் சென்ற வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பாலிவுட், கோலிவுட், தெலுங்கு சினிமா என அனைத்திலும் பிரபலமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் ஆடுகளம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சலூன் கடைக்கு சென்று அலங்காரம் செய்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார் டாப்சி.

அந்த சமயம் பார்த்து அவரை வீடியோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த சலூனிற்கு ஆர்டர் செய்திருந்த உணவை கொடுப்பதற்காக ஸ்விக்கி நபர் ஒருவர் வந்திருந்தார்.
அப்போது அவருக்கு எதிரே டாப்ஸி வந்துமே கூட அவரை சுத்தமாக கண்டுக்கொள்ளாமல் உணவை டெலிவரி செய்ய சென்றுவிட்டார் அந்த நபர். இந்த நிலையில் அந்த ஸ்விக்கி நபர் தனது வேலையில் கொண்டிருக்கும் ஈடுப்பாட்டை கண்டு பலருமே அவரை பாராட்டி வருகின்றனர்,