Cinema History
விஜயகாந்த் சொன்னதை அவர்கிட்ட சொல்லிடாத தம்பி!.. கேப்டனுக்கே பயம் காட்டிய திரை பிரபலம் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் அறிமுகமானப்போது கருப்பாக இருப்பதால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது முதல் படமான தூரத்து இடி முழக்கம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கு அடுத்த படமான சட்டம் ஒரு இருட்டறை அவருக்கு பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது.
மேலும் அது நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகருக்கு முதல் படமாகும். அதனை தொடர்ந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்தார் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே எவருக்கும் பயப்பட மாட்டார்.
எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் கவலையே படாமல் தைரியமாக கையாள்வார் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்தே கண் பார்த்து பேச பயப்படும் பிரபலம் ஒருவர் தமிழ் சினிமாவில் உண்டு என்றால் அவர் பஞ்சு அருணாச்சலம்தான்.
திரைத்துறையில் அதிக புகழ்ப்பெற்ற ஒரு பிரபலம்தான் பஞ்சு அருணாச்சலம். கண்ணதாசனிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர் பஞ்சு அருணாச்சலம். இளையராஜாவை முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்தான். அதே போல ரஜினிகாந்திற்கு முதன் முதலாக ப்ரியா படத்தில் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்தவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.
இதனால் மொத்த திரைத்துறையும் அப்போது பஞ்சு அருணாச்சலத்திற்கு அதிக மரியாதை அளித்து வந்தனர். இந்த நிலையில் அலெக்சாண்டர் என்கிற திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். ஆனால் அந்த கதை விஜயகாந்திற்கு பிடிக்காத காரணத்தால் அவர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்புவிடம் “எனக்காக கொஞ்சம் ஐயாவிடம் கதையை மாற்ற சொல்லி கூறுங்களேன்” என கேட்டுள்ளார்.
சுப்புவும் சரி என்று கூறிவிட இந்த செய்தி எப்படியோ விஜயகாந்த் நண்பர் ராவத்தருக்கு சென்றுள்ளது. அவர் உடனே சுப்புவை அழைத்து விஜயகாந்த் சொன்னதை எல்லாம் ஐயாவிடம் சொல்லி கொண்டிருக்காதீர்கள் தம்பி. அதெல்லாம் படம் நன்றாக வரும். இவன் இப்படிதான் சொல்லி கொண்டிருப்பான் விடுங்கள் என கூறியுள்ளார். சுப்பு பஞ்சு இதனை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்