Connect with us

ஒரு ஆண் இடுப்பை தொட்டா அதை அனுபவிக்கணும்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை ரேகா நாயர்!..

rekha nair

News

ஒரு ஆண் இடுப்பை தொட்டா அதை அனுபவிக்கணும்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை ரேகா நாயர்!..

Social Media Bar

Rekha Nair: ஒரு சில நடிகர், நடிகைகள் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் கிசுகிசுக்கும் பெயர் போனவர்களாக இருப்பார்கள். சினிமா என்றாலே சர்ச்சை, வதந்தி கிசுகிசுகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதில் ஒரு சில நடிகைகளை மட்டும் வைத்து அடிக்கடி வதந்திகளும், சர்ச்சைகளும் சுற்றிக்கொண்டே இருக்கும்.

அதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு அல்லது அவர்கள் சேனல் ஒன்றில் அவர்கள் அளித்த பேட்டி, இது போன்ற சில காரணங்களால் அவர்களை சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் இருக்கும்.

அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை ரேகா நாயர். அவர் தற்பொழுது பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகை ரேகா நாயர்

சின்னத்திரை நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். இவர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா பயணத்தை தொடங்கினார். ஆனால் வெள்ளித்திரையில் அவருக்கு சைடு ரோல்களே கிடைத்தது.

ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் திறமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருப்பார். இவ்வாறாக அவர் நடித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இரவின் நிழல். இந்தப் படத்தை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் உருவாக்கி இருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

rekha nair

படம் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் ரேகா நாயகரின் காட்சி பெரும் விவாத பொருளாக மாறியது. காரணம் இந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருப்பார். மேலும் அந்த காட்சி அவ்வளவு ஆபாசமாக இருக்காது.

இந்த படத்தில் இவரின் துணிச்சலான நடிப்பை பலரும் பாராட்டி வந்தார்கள். மனதில் பட்டதை நேருக்கு நேராக கூறும் நடிகை ரேகா நாயர், தற்பொழுது கூறியிருக்கும் ஒரு தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்

ரேகா நாயர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, ஒரு பேருந்தில் இடுப்பு தெரியும் அளவிற்கு சேலை அணிந்தோ, உடைய அணிந்தோ செல்லும் பொழுது, ஒரு நபர் தவறாக இடுப்பில் கை வைக்கிறார் என்றால் அதை அனுபவிக்க வேண்டும். ஏன் அவ்வாறு கூறுகிறேன் என்றால்.. அந்த தொடு உணர்வு உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்பதற்காக அல்ல.. அந்த உணர்வு உங்களை தவறாக தொடும் நபரை அவனின் கழுத்தைப் பிடித்து அடித்து வெளியே இழுத்துச் செல்லும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.

உடல் தெரியும் அளவிற்கு உடை அணிந்து பேருந்தில் பயணிப்பதற்கு தைரியம் உள்ள ஒரு பெண், தவறாக தொடும் ஒருவரை தைரியமாக அடித்து கீழே இறக்க வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு கூறினேன். மேலும் உடல் தெரியும் அளவிற்கு உடையும் அணிந்துவிட்டு ஆண்களை குறையும் கூற கூடாது என பேசியிருந்தார்.

இவரின் இந்த பேச்சு பலராலும் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் ஒரு சிலர் இவரை பூமர் ஆண்டி என்றும் கூறுவதாக இவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

To Top