Cinema History
நான் எடுத்த சீனுக்கு முன்னாடி மாஸ்டர்லாம் ஒண்ணுமே இல்ல.. காபி அடிச்சாரா லோகேஷ் கனகராஜ்?
தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானது முதலே தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அதிலும் இறுதியாக அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது.
கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்பே விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் காட்சி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இயக்குனர் வெங்கடேஷ். வெங்கடேஷும் நடிகர் விஜய்யை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதில் முக்கியமான திரைப்படம் நிலாவே வா. நிலாவே வா திரைப்படத்தில் விஜய் பேருந்தில் ஏறுவது போன்ற ஒரு காட்சி வரும். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த காட்சி மிகவும் கடினமான காட்சியாகும். ஏனெனில் ஓடும் பேருந்தில் ஏறும் விஜய். அதில் சன்னல் வழியாக பேருந்திற்குள் ஏறுவது போல காட்சி இருக்கும்.
அதை நிஜமாகவே செய்தார் விஜய். அந்த காட்சி போலவே மாஸ்டர் படத்தில் ஒரு காட்சி வரும். அதிலும் இதே போல ஓடும் பேருந்தில் ஏறுவார் விஜய். அந்த காட்சியை பற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது அதை விட அசத்தலான காட்சியை நான் நிலாவே வா திரைப்படத்தில் வைத்திருந்தேன்.
பிறகு எதற்கு இந்த காட்சிக்காக நான் ஆச்சர்யப்பட வேண்டும் என கேட்டிருந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு திரைப்படங்களின் காட்சிகளிலும் விஜய் கட்டம் போட்ட சட்டையையே போட்டிருப்பார்.
