News
கார்த்தி படத்தில் எம்.ஜி.ஆர் வரார்!.. படக்குழு செய்த தரமான சம்பவம்!..
எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் மார்க்கெட்டை யாராலும் காலி செய்ய முடியாது என கூறலாம் அந்த அளவிற்கு எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார்.
ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மக்களின் நாயகனாக இருந்ததால் அவருக்கான வரவேற்பு குறையாமலே இருக்கிறது. எனவே எப்போது எம்.ஜி.ஆர் திரையில் தோன்றினாலும் அந்த காட்சிக்கு விசில் அடிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருப்பார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரை வைத்தே ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறார்கள். வா வாத்தியாரே என்னும் இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை காட்ட போகிறார்களாம். படத்தின் கதைப்படி ராஜ்கிரண் ஒரு பெரும் எம்.ஜி.ஆர் ரசிகர்.
அவர் தனது பேரன் கார்த்தி எம்.ஜி.ஆர் போலவே வர வேண்டும் என எம்.ஜி.ஆர் படங்களாக போட்டு காட்டுகிறார். ஆனால் அதில் வரும் நம்பியாரை மட்டும் பார்த்த கார்த்தி ஒரு திருடனாக மாறுகிறார். அதன் பிறகு அந்நியன் படத்தில் வருவது போல அவருக்குள்ளேயே எம்.ஜி.ஆரின் கதாபாத்திரமும் இருக்கிறது.
இதனால் சமயத்தில் எம்.ஜி.ஆராக மாறிவிடுவார் கார்த்தி. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உண்மையில் வருவது போல காட்சி இருக்கிறதாம். இந்த காட்சிக்காக நடிகர் ஆனந்த ராஜிற்கு எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுள்ளனர். அந்த வேஷத்தில் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நிஜமாகவே எம்.ஜி.ஆர் போல் இருக்கிறாராம் ஆனந்த ராஜ்.
இந்த நிலையில் இந்த சம்பவம் படம் குறித்த வரவேற்பை அதிகரித்துள்ளது.
