Cinema History
அந்த டயலாக்கை கேட்டு இருட்டுக்குள்ள இருந்து ஒரு சத்தம்!.. ஆனந்தராஜை பயமுறுத்திவிட்ட ரஜினிகாந்த்!..
Rajinikanth: தன்னுடைய நடிப்பை காட்டிலும் மற்ற நடிகர்களின் நடிப்பை வெகுவாக ரசிக்கக் கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். பல பிரபலங்கள் இந்த விஷயத்தை தங்களது பேட்டியில் கூறி இருக்கின்றனர். செந்தில் கூட ஒருமுறை பேட்டியில் இதுப்பற்றி கூறியிருக்கிறார்.
வீரா மாதிரியான நிறைய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் செந்தில். அப்படி நடிக்கும் பொழுது செந்தில் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து தாங்க முடியாமல் காட்சி படப்பிடிப்பாக்கி கொண்டிருக்கும் பொழுதே சிரித்து விடுவாராம் ரஜினிகாந்த்.
இதனாலேயே நிறைய காட்சிகள் திரும்பத் திரும்ப படமாக்கப்பட்டிருக்கின்றன என்று செந்தில் ஒரு முறை கூறியிருக்கிறார். அதே மாதிரியான சம்பவம் ஒன்றை ஆனந்தராஜ் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

பாட்ஷா திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம்தான் ரஜினியின் பாட்ஷா என்கிற கேரக்டரை வெளிக்கொண்டுவரும் கதாபாத்திரமாக இருக்கும். அதில் ரஜினிக்கான காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு ரஜினி வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
அதன் பிறகு ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்த ஆனந்தராஜ் வசனம் பேசுவதாக காட்சி இருக்கும். அதில் ஆனந்தராஜின் நடிப்பை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென்று சிரிக்கும் சத்தம் கேட்டது.
அதுவரை நன்றாக நடித்துக் கொண்டிருந்த ஆனந்தராஜ் பயந்து என்னவென்று பார்க்கும் பொழுது இருட்டுக்குள் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார். நீங்கள் இன்னும் வீட்டிற்கு போகவில்லையா ரஜினிகாந்த் எனக் கேட்ட பொழுது இல்லை இவர் நடிப்பதை பார்க்கலாம் என்று இங்கேயே அமர்ந்துவிட்டேன்.
சிறப்பாக நடிக்கிறார் என்று கூறி சிரித்துவிட்டு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிகழ்ச்சியை ஆனந்தராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
