News
என் வாழ்க்கையை மாற்றிய ஒரு அனிரூத் பாடல்… கண்ணீர் விட்ட ரசிகர்!.. என்னதான் ஆச்சு?.
Anirudh Ravichander: ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றியடைவதற்கு முக்கிய காரணம் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும், அந்த படத்தில் வரும் பாடல்கள் முதலில் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த படத்தைப் பற்றிய ரீச் அனைவருக்கும் சென்றடையும்.
அந்த வகையில் ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு இசையமைப்பாளரும் முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் இருக்கிறார். அவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகிறது.
அந்த வகையில் அனிருத் ரவிச்சந்திரன் பற்றிய ரசிகர் ஒருவரின் பதிவு, பார்ப்பவர்களை கண்ணீர் வர வைக்கிறது.
அனிருத் ரவிச்சந்திரன்
இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன், தமிழில் 3 படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இசையமைத்த “ஒய் திஸ் கொலவெறி” பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. தொடக்கத்தில் தனுஷ் நடித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் தற்பொழுது பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவர் இசை மட்டும் இல்லாமல், அவர் இசையமைக்கும் படத்திலும் பாடல் பாடி அதுவும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைகிறது. தற்பொழுது இவருக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர் ஒருவர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அனிருத் ரசிகர் செய்த செயல்
துபாயில் ஒரு நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சென்றபோது, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத்திடம், அங்கு வந்திருந்த அஜித் குமார் என்ற ஒரு ரசிகர் நான் துபாயில் 9 வருடத்திற்கு முன்பு தொழிலாளியாக பணியில் சேரந்தேன். நான் வேலை பார்க்கும் பொழுது கண்டன் கிரியேஷன் செய்து கொண்டிருந்தேன்.

பலரும் ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று என்னை கேலியாக பேசுவார்கள். ஆனால் நான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், உங்கள் படத்தில் வரும் பாடல் ஒன்றை பாடியவரே என்னை நான் மோட்டிவேட் செய்து கொள்வேன். ஆனால் அப்பொழுது நீங்கள் தான் அந்த பாட்டை பாடினீர்கள் என்று எனக்கு தெரியாது. நான் தற்பொழுது youtube-ல் நிறைய பாலோவர்களை வைத்து இருக்கிறேன்.
நான் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு உங்களின் பாடல் தான் முக்கிய காரணம் என்றும், நான் சமூக வலைதளங்களில் மில்லியன் பாலோவர்ஸ்களை கடந்த பிறகு நிச்சயம் உங்களை நான் கூப்பிடுவேன். நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
