தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன.
இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களை ஒரு பக்கம் வைத்து மறுபக்கம் அனிருத்தை வைத்தால் நான் அனிரூத்தைதான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த அளவிற்கு அனிரூத்திற்கு விஜய் தேவரகொண்டா ரசிகராக இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
தற்சமயம் அந்த படத்தின் பேனர்கள் வைக்கும் பொழுது அனிருத்க்கும் மிக உயரமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு இசையமைப்பாளருக்கு பெரிய பேனர் வைத்த நிகழ்வு இளையராஜாவிற்கு மட்டும்தான் நடந்திருந்தது. இப்பொழுது அதே கௌரவத்தை பெற்ற இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார்.