News
பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் தயார்.. அப்படி நடிக்க ஒப்புக்கொண்ட அஞ்சலி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி தன்னுடைய பள்ளி படிப்பிற்குப் பிறகு சென்னை வந்து படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் சிறிய சிறிய குறும்படங்களில் நடித்து திரைப்படத்துறையில் நுழைவதற்கு வழி வகுத்தார். தற்போது இவர் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில், இவர் வெப் தொடர்களில் நடிக்கும் காட்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை அஞ்சலி
விளம்பரம் படங்களில் நடித்ததன் மூலம் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில், சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல ஃபிலிம் ஃபேர் விருதை இவர் வென்றார்.

கடந்த 2010ல் வெளிவந்த அங்காடி திரைப்படத்தில் கனியாக நடித்து அவரின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்று வந்த நிலையில், இந்த படத்திற்கான பிலிம் பேர் விருதை இவர் பெற்றார். இளம் நடிகையாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அஞ்சலி பல முக்கிய கதாபாத்திரங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பல மொழிகளிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பழமொழி படங்களிலும் நடித்து வரும் அஞ்சலி தற்போது வெப்ப தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகை அஞ்சலி
தற்போது பல முன்னணி நடிகைகளும் வெப் தொடர்களில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பல கவர்ச்சி காட்சிகளில் நடித்து வரும் நிலையில், நடிகை தமன்னா, நித்யா மேனன், ரெஜினா, அமலாபால் ஆகியோர் கவர்ச்சியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அஞ்சலியின் நடிப்பில் வெளியான பாகிஸ்கரானா என்ற வெப் தொடரில் கதாநாயகனுடன் ஆடை இன்றி சில நிமிட காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்திருக்கும் அஞ்சலி தற்போது வெப் தொடர்களில் படுமோசமான காட்சிகளில் நடித்து வருவது ரசிகர்களை அதிரசெய்திருக்கிறது. வெப் தொடரில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றாலே அவர் கட்டாயம் அந்த தொடரில் கவர்ச்சியாகத்தான் நடிப்பார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஏனென்றால் படங்களில் வாங்கும் அதே சம்பளம் வெப் தொடர்களில் கிடைக்கிறது. மேலும் இத்துடன் கால்ஷீட் நாட்களும் குறைவுதான்.
மேலும் அஞ்சலி இவ்வாறு நடித்திருந்ததை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இவ்வாறு நடிக்க வேண்டுமா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
