கேப்டனுக்கு முன்பே சாப்பாட்டு விஷயத்தில் விதிமுறை கொண்டு வந்த தயாரிப்பாளர்!.. எல்லோரும் இந்த முடிவை எடுக்கணும்..
Captain Vijayakanth : திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் முதலியார் என்பவர் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நபராவார். டி ஆர் எஸ் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்திருக்கிறார்.
பொதுவாக விஜயகாந்தை குறித்து அனைவரும் பேசும்பொழுது முக்கியமான ஒரு விஷயத்தை பேசுவார்கள் அதாவது சாப்பாடு கொடுப்பதில் விஜயகாந்த் வள்ளல் என்று கூறுவார்கள். விஜயகாந்த் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது கர்ணனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது சொர்க்கவாசல் அவருக்காக திறக்கவில்லையாம்.
ஏனெனில் அவ்வளவு தானங்கள் செய்த போதும் கூட கர்ணன் அன்னதானம் மட்டும் செய்யாமலே இருந்தார். தானங்களிலேயே பெரியது அன்னதானம் தான் எனவே அதை செய்தால் தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

அதேபோல விஜயகாந்த் பலருக்கும் உணவு வழங்கி வந்தவர் முக்கியமாக படப் பிடிப்பு தளங்களில் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் மற்றவர்களுக்கும் உணவாக கொடுப்பார் விஜயகாந்த். அந்த விஷயத்தை 1900 களிலேயே செய்து இருக்கிறார் டி ஆர் எஸ்.
டி ஆர் எஸ் அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் அனைத்து நடிகர் நடிகைகள் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான உணவை தான் வாங்கி தருவாராம். அதை தாண்டி கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு வேறு நல்ல உணவு வேண்டும் என்று நினைத்தால் அதை அவர்கள் சொந்த காசை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டுமாம்.
தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான் வரும் இப்போதும் அப்படியான ஒரு நிலை இருந்தால் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே விஜயகாந்திற்கு முன்பே டி ஆர் சுந்தரம் இப்படியான ஒரு சமத்துவத்தை சினிமாவிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.