News
ஒரு காத்துக்கு தாங்காது அந்த வீடு!.. கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்கோங்க!.. விஜய்யை வச்சி செய்த பத்திரிக்கையாளர்!..
Vijay Politics : விஜய் அரசியலுக்கு வந்தது முதலே மக்கள் மத்தியில் பிரபலமாகும் வகையில் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் சினிமாவில் இருந்த சமயத்தில் சமூகம் சார்ந்து எந்த ஒரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் இருந்தார்.
விஜய் அரசியல் கட்சி துவங்கிய பிறகு அரசியலில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனது குரலையும் பதிவு செய்து வருகிறார். மேலும் மக்களுக்கும் சில நன்மைகளையும் செய்து வருகிறார்.

உதாரணமாக இடையில் கன்னியாகுமரியில் திருநெல்வேலி பக்கம் அதிக வெள்ளம் ஏற்பட்ட பொழுது அங்கு சென்று அங்கிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வந்தார் விஜய். அதேபோல தற்சமயம் சென்னையில் சில பகுதிகளில் வீடு இல்லாத மக்களுக்கு விலையில்லா வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார் விஜய்.
விஜய்யின் இலவச வீடு திட்டம்:
மொத்தமாக ஏழு வீடுகள் அவர் கட்டிக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் இவர் இதை ஒரு திட்டமாகக் கொண்டு வருவார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து விமர்சனம் அளித்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான அந்தணன்.
அவர் இது குறித்து கூறும் பொழுது அந்த வீடுகள் மிகவும் சிறியவையாக உள்ளன. மேலும் அவை வேகமாக காற்று அடித்தாலே காலி ஆகிவிடும் போல தெரிகிறது. விஜய் மீது எக்கச்சக்கமான மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதனால்தான் குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் விஜய் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து இருக்கின்றனர்.

இப்படி இருக்கும்பொழுது அந்த நம்பிக்கையை ஏமாற்றாமல் விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கட்டிக் கொடுத்தவர் நல்லவகையான வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கலாம் என்கிறார் அந்தணன். ஆனால் இது குறித்து விஜய் ரசிகர்கள் கூறும் பொழுது வீடுகளே இல்லாத மக்களின் வாழ்க்கையை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
அவர்களுக்கு ஒரு வீடு இருந்தாலே போதும் என்கிற நிலையில் தான் இருப்பார்கள் அப்படி இருக்கும்போது விஜய் கட்டி தரும் இந்த சின்ன வீடுகளே அவர்களுக்கு பொக்கிஷமாகதான் இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
