Tamil Cinema News
எனக்கு அந்த மாதிரி ரோல் குடுங்க ப்ளீஸ்! ஏக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன்!
மலையாள சினிமாவில் அல்பொன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானாலும் தொடர்ந்து கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கூட அவருக்கு குறைவான வாய்ப்புகளே அமைந்தது. அதன் பின்னர் சில படங்களில் ஐட்டம் பாடல்களுக்கும் அனுபமா தோன்றினார்.
பின்னர் க்ளாமர் ரூட்டை கையில் எடுத்த அனுபமா தொடர்ந்து இண்ஸ்டாவில் க்ளாமர் புகைப்படங்களாக ஷேர் செய்ய ஃபாலோவர்கள் அதிகமானார்கள். இந்த ஃபார்முலாவை பின்பற்றி தற்போது சினிமாவில் படுகவர்ச்சியான ரோல்களை எடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் க்ளாமரில் இறங்கி கலக்கிய ‘தில்லு ஸ்குவார்’ செம ஹிட். என்னதான் க்ளாமர் ரோல்களில் நடித்து வந்தாலும் அனுபாமாவுக்கு ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு நெடுநாள் விருப்பமாம்.
சமீபத்தில் அதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய அவர் “ஒரு படத்திலாவது நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். வில்லியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பது என் கனவு.
வில்லியாக நடிக்கௌம் நடிகைகளை பார்க்கும்போது எனக்கு ஏன் இதுபோன்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என ஏங்குவேன்.
அதுபோன்ற வில்லியாக நடிக்கும் வாய்ப்பு எந்த மொழி திரைப்படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
