Connect with us

13 வயசுலையே என் மகளை அதை பண்ண சொன்னாங்க.. கவர்ச்சி நடிகை பொண்ணுக்கு வந்த பிரச்சனை!.

actress anuradha

Latest News

13 வயசுலையே என் மகளை அதை பண்ண சொன்னாங்க.. கவர்ச்சி நடிகை பொண்ணுக்கு வந்த பிரச்சனை!.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒரு சில நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் சாதிப்பது என்பது சுலபமாக இருந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு அவர்களின் தனிப்பட்ட நடிப்பு திறமை மட்டுமே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் சாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரபல கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகளுக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அனுராதா

80-ஸ்களில் அதிகம் அறியப்பட்ட நடிகைகளில் அனுராதா ஒருவர். இவர் பல படங்களில் கவர்ச்சி நடனங்களில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். சுலோச்சனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவிற்காக அனுராதா என மாற்றி உள்ளார்.

பல படங்களில் நடித்து பிரபலமான அனுராதா சன் டிவியில் பல முக்கிய தொடர்களில் நடித்திருக்கிறார். அதில் இவரை பலராலும் அறியப்பட்டது தெய்வமகள் சீரியல். இதில் நடித்ததன் மூலம் மக்களின் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தார். அனுராதா 1987-ல் சதீஷ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அபிநயா ஸ்ரீ மற்றும் காளி சரண் என்ற இரு பிள்ளைகள் உள்ளது.

anu radha

இது அபிநயா ஸ்ரீக்கு 13-வயது இருக்கும் போது நடந்த சம்பவத்தை பற்றி அனுராதா தற்பொழுது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

13-வது வயதில் அனுராதா மகளுக்கு நடந்த சம்பவம்

அனுராதா தன்னுடைய 13-ஆவது வயதில் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்நிலையில் பேட்டியில் அபிநயா ஸ்ரீ-யை சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது உங்களுடைய விருப்பமா அல்லது மகளுடைய விருப்பமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அனுராதா எங்க இருவருக்குமே விருப்பம் இல்லை என கூறினார்.

அனுராதா பேசும் போது “அபிநயா ஸ்ரீ ரோட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் பொழுது சித்திக் சார் பார்த்துவிட்டு அவர் எடுக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என கூறி அபிநயா ஸ்ரீ-யை நடித்ததற்கு கேட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே கஸ்தூரி ராஜா சார் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகர் தனுஷ் உடன் நடிப்பதற்கு போட்டோ ஷூட் நடத்தினார். ஆனால் சில காரணங்களுக்காக படம் நின்று விட்டது என தெரிவித்தார்.

Abhinayashree

எனவே நான் அதை அப்படியே விட்டு விட்டேன். அதன் பிறகு மேனேஜர் லத்தீஷ் சார் என்னுடைய வீட்டுக்கு வருகிறார். அவர் யார் என்றால் என்னுடைய முதல் படத்தின் மேனேஜர். நான் அவரிடம் கூறினேன் அவளுக்கு 13 வயது தான் ஆகிறது. இப்பொழுது குண்டாக இருக்கிறாள். ஒரு 18 வயது ஆகட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறினேன். ஆனால் அவர் கேட்காமல் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன். பிறகு பார்த்தால் மீண்டும் கஸ்தூரி ராஜா சார் போன் செய்து படத்தில் நடிப்பதற்காக அபியை கேட்டார். நான் நேரடியாக சென்று நடந்தவற்றை கூறினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார் நான் அறிமுகப்படுத்தலாம் என நினைத்தேன் என என்னிடம் வருத்தமாக கூறினார் என அனுராதா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அபிநயா ஸ்ரீ ஃப்ரெண்ட்ஸ் படத்தில் தேவயானியின் தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு அல்லு அர்ஜுன் உடன் “ஆ அண்டே அமலாபுரம்” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top