Tamil Cinema News
ஒரே காட்சியில் அனுஷ்காவும், நயன்தாராவும் பிகினியில்.. ஆடிப்போன இணையத்தளம்..!
நயன்தாரா அனுஷ்கா இருவருமே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள்தான். சொல்ல போனால் நயனுக்கு முன்பிருந்தே அனுஷ்காவிற்கு பெரிய மார்க்கெட் என்பது இருந்து வந்தது.
இந்த நிலையில் அனுஷ்கா தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வந்தார். சிங்கம், வேட்டைக்காரன் என அவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெற்று தந்தது.
அதற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு காரணமாக தமிழ் சினிமாவில் அனுஷ்காவிற்கான வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது. இந்த நேரத்தை நடிகை நயன்தாரா சரியாக பயன்படுத்தி கொண்டார்.
அந்த சமயத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களோடு நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார் நடிகை நயன்தாரா. இந்த நிலையில் இருவரும் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பில்லா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியானது.
அப்போது இரண்டு திரைப்படத்திலுமே கதாநாயகி பிகினி உடையில் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. தமிழில் அந்த காட்சியில் நயன் தாராவும் தெலுங்கில் நடிகை அனுஷ்காவும் நடித்திருந்தனர். அந்த காட்சியில் பல நடிகைகள் நடிக்க மறுத்தப்போதும் அனுஷ்காவும், நயன் தாராவும் அந்த காட்சியில் நடித்து வரவேற்பை பெற்றனர்.