அந்த ஒரு படத்தில் நடிச்சதுதான் என் வாழ்க்கையில் செஞ்ச மோசமான விஷயம்… சூர்யா படத்தை விமர்சித்த நயன்தாரா..!

நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இவ்வளவு திரைப்படங்கள் நடித்த பிறகும் கூட ஒரு படத்தில் நடித்ததற்காக அவர் வருந்துவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஐயா திரைப்படத்தின் மூலமாகதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ஐயா திரைப்படத்திலும் சரி சந்திரமுகி திரைப்படத்திலும் சரி பெரிதாக கவர்ச்சி காட்டாமல் தான் நடித்திருப்பார் நயன்தாரா.

Social Media Bar

ஆனால் இரண்டு படத்திலும் ஒரே ஒரு பாடலில் மட்டும் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் கவர்ச்சிதான் ஒர்க் அவுட் ஆகும் என்று அப்பொழுது நயன்தாரா நினைத்து வந்தார்.

கஜினி படம்:

இந்த நிலையில் அதோடு இல்லாமல் மூன்றாவதாக அவர் நடித்த கஜினி திரைப்படத்தில் முழுக்க முழுக்க கவர்ச்சியாகவே நடித்திருந்தார். ஆனால் பெரும்பாலும் நயன்தாரா கவர்ச்சியாக நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாது.

ஆனாலும் கஜினி திரைப்படம் நன்றாக வெற்றியை பெற்றாலும் அதில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய நயன்தாரா கூறும் போது அந்த திரைப்படத்தில் என்னை காட்டிய விதமே அவ்வளவு நன்றாக இல்லை.

நொந்துப்போன நயன்தாரா:

நான் என் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்றால் அது கஜினி திரைப்படத்தில் நடித்ததுதான் ஏனெனில் அந்த கதாபாத்திரமே அவ்வளவு சிறப்பான கதாபாத்திரமாக இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய முருகதாஸ் கூறும் போது நடிப்பவர்களுக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றெல்லாம் கதாபாத்திரத்தை மாற்றி அமைக்க முடியாது அந்த கதாபாத்திரம் படத்திற்கு என்ன தேவையோ அந்த வகையில் தான் இருக்கும் என்று பதில் அளித்து இருக்கிறார்.